கடலைமாவு சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1

மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலை மாவு - 3 தேக்கரண்டி

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கடலைப்பருப்பு போடவும்.

இரண்டும் வறுபட்டவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.

இரண்டும் வதங்கிய பின்னர் அதில் மிளகாய்த்தூள் போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு முக்கால் டம்ளர் தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.

இதனை கொதிக்கும் கலவையில் ஊற்றி கலக்கவும்.

நன்றாய் பொங்கி குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: