ஈஸி வெஜிடபிள் கொத்ஸ்
தேவையான பொருட்கள்:
கேரட் - 1
முட்டைக்கோஸ் - 1/2 கப்
கத்தரிக்காய் - 2
உருளை கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
கேரட்டை துருவவும். முட்டைகோஸை நறுக்கவும்.
உருளைக்கிழங்கையும் துருவவும்.
கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்பொடி, கேரட், முட்டைக்கோஸ், கத்தரிக்காய், உருளை கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சாம்பார் பொடி, உப்பு இவை எல்லாவற்றையும் போடவும். 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து 5 விசில் விடவும். குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
இப்போது குக்கரை திறந்து ஒரு மத்தால் கொத்ஸை லேசாக கடையவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
கொத்ஸை வாணலியில் ஊற்றி ஒரு கொதி விடவும். கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது இட்லி, தோசை, ரவா உப்புமா போன்ற சிற்றுண்டிகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆகும்.