ஈஸி சுண்டைக்காய் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

சுண்டைக்காய் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 5 இலை

கடுகு - தாளிக்க

செய்முறை:

முதலில் சுண்டைக்காயை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

துவரம் பருப்பை தண்ணீர் விட்டு கழுவி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கொள்ளவும்.

பின்னர் துவரம் பருப்பு, சுண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

இத்துடன் ப்ரஷர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை கொட்டி கிளறவும்.

குறிப்புகள்:

இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும்.