இறால் சாம்பார்
தேவையான பொருட்கள்:
சிறிய வகை இறால் - 1/4 கிலோ
வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
வரமிளகு - 3
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வரமிளகாய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் நிறம் வரும்வரை வதக்கவும்.
வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி உடைந்ததும் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் இறாலை போட்டு ஒரு வதக்கு வதக்கிய பின் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு உப்பும் சேர்க்கவும்.
கொதித்ததும் அதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
ஒரு 5 நிமிடத்திற்கு பின் கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதத்திற்கு, தோசை, இட்லிக்கு வெகு பொருத்தமாக இருக்கும்.