இட்லி தக்காளி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 6

பெரிய வெங்காயம் - 3

பாசிப் பருப்பு - 6 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 3

தேங்காய்ப் பூ - 3 தேக்கரண்டி

இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி

பச்சைக் கொத்தமல்லி - சிறிது

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், தக்காளியை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.

பச்சைமிளகாய், தேங்காய்ப் பூ இரண்டையும் அரைத்து வைக்கவும்.

பிரஷர் பானில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1.5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

பாசிப்பருப்பு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், அரைத்த மிளகாய் கலவை, இஞ்சி விழுது, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டு, தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

பிரஷர் பானை மூடி, 2 - 3 விசில் வரும் வரை வேக விடவும்.

ஆறியதும் திறந்து, உப்பு சேர்க்கவும். கொத்தமல்லித் தழையை பொடியாக கட் செய்து மேலே தூவவும்.

குறிப்புகள்: