இட்லி சாம்பார் (2)
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, அதோடு வெங்காயம்,தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து,தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
வெந்த பின்னர் நன்றாக மசிக்கவும்.
கடைசியில் வானலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.