இடி சாம்பார்
தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
தனியா - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - சிறிது
கடலைப்பருப்பு, உளுந்து, வேர்கடலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க
எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி மற்றும் காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைக்கவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
வெறும் வாணலியில் ஒரு தேக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை ஒன்றும் பாதியுமாக இடித்து வைக்கவும்.
துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள பருப்பில் நறுக்கின காய்கள், புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
தாளித்தவற்றை பருப்பு கலவையில் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு நுரைத்து வரும் போது அதனுடன் இடித்த பொடி சேர்க்கவும்.
இறக்கும் போதும் சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த சாம்பார் திக்காக இருக்கும்.
நீர்க்க வைக்க தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து சேர்த்தால் சுவையும், மணமும் மாறாமல் இருக்கும்.
இதில் சேர்க்கும் மசாலாவை அம்மியில் இடித்து செய்தால் சுவையாக இருக்கும்.