வெள்ளரிப்பிஞ்சு சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
வெள்ளரிப்பிஞ்சு - 4
தக்காளி - 2
வெங்காயம் - 1
தயிர் - 1 கோப்பை
எலுமிச்சைச்சாறு - இரண்டு கரண்டி
மல்லிக்கீரை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிப்பிஞ்சு, வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லிக்கீரை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்
அதனுடன் அனைத்து பொருள்களையும் போட்டு நன்றாக கிளறி பரிமாறவும்.