விளாங்காய்ச் சட்னி
0
தேவையான பொருட்கள்:
விளாங்காய் - 2
தேங்காய் - ஒரு கீற்று
பச்சை மிளகாய் - 10
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.
விளாங்காயை உடைத்து உள்ளே இருக்கும் விழுதை எடுங்கள்.
தேங்காய்,பச்சைமிளகாய்,உப்பை வைத்து அரையுங்கள்.
கடைசியில் உளுத்தம்பருப்பை வைத்து ஒரு முறை குழவியை ஆட்டிவிட்டு சட்னியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.