மைக்ரோவேவ் மாம்பழச்சட்னி
0
தேவையான பொருட்கள்:
மாம்பழம் (பொடியாக நறுக்கியது) - 2
வெங்காயம் - 1/2 கோப்பை
உலர்ந்த திராட்சை - 1 கோப்பை
நசுக்கிய பூண்டு - 2 பற்கள்
துருவிய இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
சர்க்கரை - 1/4 கோப்பை
நொறுக்கிய காய்ந்தமிளகாய் - 1
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி
உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரு பீங்கான் கோப்பையில் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு அதை மைக்ரோ அவனில் ஐந்து நிமிடத்திற்கு வைத்து வேகவைக்கவும்.
வேகும் பொழுது பாதியில் அவனைத் திறந்து சட்னியை கரன்டியால் கலக்கி நன்கு மசித்துவிட்டு மீண்டும் தேவைக்கேற்ப வேகவைக்கலாம்.