மிளகாய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வரமிளகாய் - 10

பூண்டு - 7 பல்

புளி - கொட்டை பாக்கு அளவு

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, குறைந்த தீயில் மிளகாயை மொறுமொறுப்பாக வறுக்கவும்.

வறுத்த மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

அதனுடன் பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து மைய அரைக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த சட்னியுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.

சுவையான, காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

குறிப்புகள்:

நல்லெண்ணெய் சேர்ப்பது தான் இதில் நல்ல சுவையைக் கொடுக்கும்.

எண்ணெய் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு சாப்பிடவும். எண்ணெயில் ஊற ஊற சுவை இன்னும் அதிகமாகும்.