மாங்காய் தேங்காய் சட்னி
0
தேவையான பொருட்கள்:
கிளிமூக்கு மாங்காய் - 1
தேங்காய் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் 5
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு, வெல்லம்- தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை தோல் சீவி துருவி வைக்கவும்.
வெந்தயம், கடுகு, இரண்டையும் வெறும் வாணலியில் வறுக்கவும்.
மிளகாயை எண்ணெய் விட்டு வறுக்கவும்.
வறுத்த மிளகாய், வெந்தயம், கடுகு, உப்பு எல்லாவற்றையும் முதலில் பொடிக்கவும்.
பிறகு அதோடு வெல்லம், பெருங்காயத்தூள், தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.