பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 10

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பொட்டுக்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை பொடியாக திரித்து வைத்து கொள்ளவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்பு பருப்பு வகைகளை சேர்த்து வதக்கவும்.

பருப்பு நன்கு சிவந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் மேல வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்:

இந்த சட்னி இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.