பெங்காலி தக்காளி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய தக்காளி - 2 கப்

பஞ்ச் பூரன் விதைகள் (சோம்பு, கடுகு, வெங்காய விதை, வெந்தயம், சீரகம்) - 1/4 தேக்கரண்டி

ஊறவைத்த உலர்ந்த திராட்சை - 1 மேசைக்கரண்டி

இஞ்சி (மெல்லிதாக நீள வாக்கில் நறுக்கியது) - 1/2 தேக்கரண்டி

நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மைக்கரொவேவ் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி 1 நிமிடத்திற்கு சூடு படுத்தவும்.

அந்த எண்ணெயில் பன்ச்பூரன் விதைகளை சேர்த்து மறுபடியும் 1 நிமிடம் சுடவைக்கவும்.

இதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து, மைக்ரொவேவில் 3 நிமிடம் சுடவைக்கவும்.

திராட்சை, இஞ்சி, பச்சை மிளகாய், சர்க்கரை சேர்த்து, மறுபடியும் மைக்ரொவேவில் 10 நிமிடம் சுடவைக்கும்.

4 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும். சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: