தக்காளி கார சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
பூண்டூ - 5 பல்
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மல்லி இலை - 2 தழைகள்
சின்ன வெங்காயம் - 5
கடுகு, கருவேப்பிலை - சிறிது
எண்ணை - 50 மில்லி
உப்பு - 1 தேவையான அளவு
செய்முறை:
எண்ணை தவிர அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து 50 மில்லி எண்ணையை ஊற்றி ,காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை போட்டு வெடித்தவுன் அரைத்த விழுதை சேர்த்து தளதளவென எண்ணை பிரியும்வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
சுவையான சட்னி ரெடி