கத்திரிக்காய் சட்னி (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/2 கிலோ

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

தக்காளி - 2

கறிவேப்பில்லை - 5 இலை

கடுகு - தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியதாக வெட்டி கொள்ளவும்.

கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்தவுடன் சிறிது நேரம் ஆறவிட்டு அதன்பின் மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் பெருங்காயம் தூள் தூவுவவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.