கத்தரிக்காய் கொத்ஸு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ (அல்லது) 8

பெரிய வெங்காயம் - 2

புளி - 2 எலுமிச்சம் பழ அளவு

பச்சை மிளகாய் - 6 (அல்லது) 7

தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப் பவுடர் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

கத்தரிக்காயை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயுடன் தேங்காய்ப்பூ சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக ஆறியதும் மிக்ஸியின் பெரிய ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெருங்காயத்தைப் பொரியவிடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கி, கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி, அரைத்த கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாய், தேங்காய் விழுதையும் சேர்த்து உப்புப் போட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்புகள்:

கத்தரிக்காய் நன்றாக ஆறிய பின்னரே மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். சூடாக இருக்கும் போதே அரைக்க முயன்றால் சுற்றிலும் தெறிக்கும்.

பொதுவாக வேகவைத்த பொருட்களை (கத்தரிக்காய், கீரை போன்றவற்றை) ஆறிய பின்னரே மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

பொங்கல், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள பொருத்தமானது.