கதம்ப சட்னி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 20
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
பூண்டு - 10
சிறிய குடை மிளகாய் - 1
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய், கடுகு, கருவேப்பிலை - தாளிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் முதலில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அதே வாணலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
பின்பு பூண்டு சேர்த்து பாதி வதங்கியதும் வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக குழுவி தண்ணீரை பிழிந்து புதினாவையும் கொத்தமல்லியையும் சேர்த்து 3 நிமிடம் வதக்கி இறக்கவும்.
தக்காளியை தனியாக வதக்கி எடுக்கவும்.
ஆறியதும் முதலில் உளுந்து, காய்ந்த மிளகாய் தேங்காய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பூண்டு வெங்காய கலவையை சேர்த்து அரைத்து கடைசியாக உப்பு மற்றும் தக்காளி சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.
பிறகு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சிட்னியில் கொட்டவும். சுவையுடன் கதம்ப சட்னி தயார்.
குறிப்புகள்:
இந்த சட்னி இட்லி தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், கலந்த சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.