எள்ளு சட்னி (1)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
எள்ளு - 4 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் வற்றல் - 5
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எள்ளை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வெறும் சட்டியைக் அடுப்பில் வைத்து காய்ந்ததும் எள்ளை கொஞ்சமாய் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு அத்துடன் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், உப்பு, புளி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தாளித்துக் கொள்ளவும்.