எள்ளு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 3 துண்டு

எள் - 7 தேக்கரண்டி

பொரிக்கடலை - 3 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய் - 5

பூண்டு - 4 பல்

புளி - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருளை தயாராக வைக்கவும்.

எள்ளை வெறும் வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும். காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்

அரைக்க கொடுத்த பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

எள் சட்னி ரெடி (தாளிக்க தேவையில்லை)

குறிப்புகள்:

எள்ளை மொத்தமாக வறுத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது உபயோகிக்கலாம்.