ஈசி தக்காளி சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தாளிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை பிழிந்து சாறு தனியாக எடுத்து வைக்கவும்.

தக்காளி சதை மட்டும் எடுத்து சின்னவெங்காயத்துடன் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின் அரைத்த விழுதையும் தனியாக எடுத்து வைத்த சாற்றையும் சேர்க்கவும்.

அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வாசனை போகும் வரை அடுப்பில் கிளறி கொதிக்க வைத்து பின் இறக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: