வெண்டைக்காய் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/2 கிலோ

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 5 பல்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 5

ஏலக்காய் - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

பாதாம் பருப்பு - 10 அல்லது முந்திரிப்பருப்பு - 10

சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 8 தேக்கரண்டி

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, பாதாம் பருப்பு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும். பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்பு வெண்டைக்காயை போட்டு வதக்கவும். வெண்டைக்காய் வதங்கியதும், அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். தேவையான நீர் விடவும்.

வெண்டைக்காய் வெந்ததும், தேங்காய் பால் சேர்க்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: