வெஜிடபுள் குருமா
தேவையான பொருட்கள்:
கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி - 1 1/2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 3/4 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
புதினா - 10 இலைகள்
தேங்காய் துருவல் - 1 கப்
ஊற வைத்த முந்திரிப்பருப்பு - 10
செய்முறை:
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் சேர்த்து வெடித்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த காய் கலவை சேர்த்து ஒரு கொதி விடவும்.
கொதித்ததும் தேங்காய் துருவலையும், முந்திரிப் பருப்பையும் மையாக அரைத்து ஊற்றவும்.
குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு சுவையாக இருக்கும்.