முட்டை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 5

பச்சை மிளகாய் - 5

இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

முந்திரி - 5

ஏலக்காய் - 3

பட்டை - 2

கிராம்பு - 1

அன்னாசிப்பூ - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

மல்லித் தூள் - 3 மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

தாளிக்க:

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி முட்டைகளைப் போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீரில் போட்டு ஓட்டை நீக்கிக் கொள்ளவும்.

தேங்காயுடன் பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பிறகு அரைத்தவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொதித்ததும் வேக வைத்த முட்டைகளைப் போட்டு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: