பனீர் முட்டை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை - 2

பனீர் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்s

முந்திரி பருப்பு - 12 என்னம்

கசகசா - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 3 (சுடுநீரில் போட்டு மேல் தோலை நீக்கி கூழாக அரைக்கவும்)

நீள நீளமாக நறுக்கிய வெங்காயம் - 3

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தயிர் - 1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

இலவங்க பட்டை - 1 அங்குலம்

கிராம்பு - 3 என்னம்

கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி

எண்ணைய் - தேவையான அளவு

நெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முந்திரி, கசகசாவை தனித்தனியே வறுத்து தேங்காயுடன் அரைக்கவும்.

வாணலியில் எண்ணையுடன் நெய்யையும் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு போடவும்.

அதோடு வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இதனுடன் தக்காளி விழுது சேர்த்து மற்ற மசாலா பொடிகளையும் போட்டு, கடைந்த தயிரையும் சேர்க்கவும்.

மசாலாவிலிருந்து எண்ணைய் தனியே பிரியும் வரை வேகவிடவும்.

இறுதியில் அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

முட்டையின் மேல் தோலை நீக்கி சதுரவடிவத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பனீரையும் முட்டையும் சிறிதளவு நெய்யில் இரண்டு நிமிடம் வறுத்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.

நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை மேலே தூவவும்.

நறுக்கிய வெங்காய துண்டுகளுடன் எலுமிச்சை துண்டுடனும் சூடாக பறிமாறலாம்.

குறிப்புகள்: