தேங்காய்பால் உருளை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

நறுக்கிய தக்காளி - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

பட்டை - சின்ன துண்டு 3

மிளகாய் வற்றல் - 6

சோம்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றல், சோம்பு, பட்டை போட்டு வதக்கி எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு 30 நொடி வதக்கவும்.

அதன் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து விட்டு வெங்காயத்துடன் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கி விடவும்.

அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் விழுது மற்றும் மஞ்சள் தூள், சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும்.

பிறகு ஒரு நிமிடம் கழித்து கொதித்து நுரைவரும் போது எடுத்து வைத்திருக்கும் பாலை ஊற்றி, 3 நிமிடம் கழித்து கிளறி இறக்கி விடவும்.

இறக்கிய பிறகு மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசையுடன் பரிமாறவும்.