தக்காளி குருமா (4)
தேவையான பொருட்கள்:
சுமாரான அளவு தக்காளி - 5 அல்லது 6
சுமாரான அளவு பெரிய வெங்காயம் - 2
ஃபுரோசன் பச்சைபட்டாணி - 2 மேசைக்கரண்டி
நசுக்கிய இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
நசுக்கிய பூண்டு - 2 பற்கள்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா இரண்டு
எண்ணெய் - 1/4 கோப்பை
உப்பு தூள் - 2 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய்ப்பூ - 1 கோப்பை
கசகசா - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
தக்காளியை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகவிட்டு அதன் தோலை நீக்கி, நன்கு கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் அரைக்கத் தேவையான பொருட்களைப் போட்டு மையாக அரைத்து தக்காளி கரைசலில் சேர்த்து, இரண்டு கோப்பை நீரையும் ஊற்றி கலக்கி வைக்கவும்.
இஞ்சிப் பூண்டை நசுக்கிவைக்கவும். வெங்காயத்தை சற்று பெரியத் துண்டுகளாக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி கரைசலை ஊற்றி உப்பைப் போட்டு நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
குருமா கொதித்து கெட்டிபதம் வந்தவுடன் பட்டாணி மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு நல்லபொருத்தமாக இருக்கும்.