காலி பிளவர் தயிர் குருமா
0
தேவையான பொருட்கள்:
புளிக்காத கெட்டித்தயிர் - 2 கப்
பால் - 1/2 கப்
காலிபிளவர் பூக்கள் - 3 கப்
உருளை கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 2 கப்
கிராம்பு - 3
கொத்தமல்லி தழை - சிறிது
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளையை பிங்கர் சிப்ஸுக்கு நறுக்குவது போல் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, இஞ்சி, கிராம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து காலிபிளவரையும், உருளைக்கிழங்கயும் சற்று வதக்கிக்கொள்ளவும்.
அதில் அரைத்த விழுதைப் போட்டு பால், சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.
வெந்ததும் தயிர் சேர்த்து நன்கு கலந்து பொங்கியதும் இறக்கி வைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.