காய்கறி குருமா (5)
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 15
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - 1 அங்குலம் அளவு
சிறிய பூண்டு - 6
கசகசா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
லவங்கம் - 1
பொடிதாக நறுக்கிய கேரட் - 1
பூக்களாக உதிர்த்த காலிப்ளவர் - 1/2 கப்
பொடிதாக நறுக்கிய பீன்ஸ் - 5
பட்டாணி - 1/4 கப்
சிறிய உருளை கிழங்கு - 1
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணைய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்கு
செய்முறை:
காய்கறிகளை தனியாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல் தவிர அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து பின் துருவலையும் சேர்த்து அரைத்து மசாலாவாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளித்து அரைத்த மசாலாவை கொட்டி கிளறி 1 நிமிடம் கழித்து மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள், சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாடை போகும் வரை வதக்கவும். நல்ல சிவப்பு நிறத்தில் வரும்.
அப்போது வேகவைத்த காய்கறிகளை போட்டு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை மசாலாவுடன் சேர்த்து வதக்கி கொதிக்கவிடவும்.
சுவையான காய்கறி குருமா ரெடி.