ஈஸி மஷ்ரூம் குருமா ( குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம் - 1 பாக்கெட்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - தாளிக்க

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

பொடிக்க :

பட்டை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மஷ்ரூமை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும்.

பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்து கொள்ளவும்.

தேங்காய் துருவல் மற்றும் சோம்புடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

இந்த அரைத்த தேங்காய் விழுதில் இருந்து தேங்காய் பாலினை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு தாளித்து பின் வெங்காயம் போட்டு வதக்கவும். அதன் பின் மஷ்ரூமை சேர்த்து வதக்கவும்.

மஷ்ரூம் கொஞ்சம் வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து உடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

2 -3 நிமிடம் வதங்கிய பிறகு அதில் பொடித்து வைத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் தூளினை சேர்த்து அத்துடன் தேங்காய் பாலினை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

10 - 15 நிமிடம் கழித்து மஷ்ரூம் குருமாவில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.