ஈசி வெஜ் வெள்ளை குருமா
தேவையான பொருட்கள்:
காய்கறிகள் (கேரட், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், பீன்ஸ், உருளை) - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பூண்டு ( தட்டிக்கொள்ளவும்) - 4 பல்
பட்டை - 2 சிறிய துண்டு
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 3 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 4
மிளகாய் - 2 அல்லது 3
மல்லி புதினா - சிறிதளவு
தயிர் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
காய்கறியை கட் பண்ணிக்கொள்ளவும். வெங்காயம், மல்லி இலை, புதினா கட் பண்ணவும். காய்கறியை அவனில் 2 நிமிடம் அல்லது தனியாக உப்பு போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
தேங்காய் முந்திரிபருப்பு, 1 மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை போட்டு, பூண்டு, வெங்காயம் தாளிக்கவும். வேக வைத்த காய்கறியை சேர்க்கவும், 2 மிளகாய் கீறி போடவும், மல்லித்தூள்,சீரகத்தூள் சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும், உப்பு போடவும்.தயிர் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்ததேங்காய் கலவையை சேர்க்கவும். மல்லி புதினா தூவவும். தேங்காய் வாடை அடங்கியதும் இறக்கி பரிமாறவும்.