வேர்க்கடலை மசால் வடை
4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை பருப்பு - 400 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலை, பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் உப்பு சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை எல்லவற்றையும் பொடியாக நறுக்கி, அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.