வேர்க்கடலை பக்கோடா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். தோலுடன் இருக்கும் வேர்க்கடலை தான் இதற்கு சுவையாக இருக்கும்.

மைக்ரோவேவ் சேஃப் பவுலில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையெனில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.

மைக்ரோவேவை ஹையில் 6 நிமிடங்கள் செட் செய்யவும். வேர்க்கடலை கலவையை 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.

பிறகு மீண்டும் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து கலந்துவிடவும். மேலும் 2 நிமிடங்கள் வைத்தெடுத்து தட்டில் 2 நிமிடங்கள் ஆறவிடவும்.

குறிப்புகள்: