வேர்கடலை பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேர்கடலை ரோஸ்டட் - 1 கப்

தண்ணீர் - 1 தேக்கரண்டி

கடலை மாவு - 1 1/2 தேக்கரண்டி

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

மிளகாய் துள் - காரத்திற்கேற்ப

கார்ன் மாவு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கொஞ்சம்

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் வைக்கவும். மூட கூடாது.

வேறு ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, அரிசிமாவு, கடலைமாவு, கார்ன் மாவு, தண்ணீர் விட்டு பிசறி வைக்கவும்.

பின் சூடான எண்ணெய் அதன் மேல் எல்லாவற்றிலும் படும்படி நன்றாக கலக்கவும். மைக்ரோவேவில் 7 நிமிடங்கள் வைக்கவும். இடையே ஒரு தடவை வெளியில் எடுத்து ஸ்பூனால் நன்றாக கிளறி மறுபடியும் 5 நிமிடங்கள் வைக்கவும்.

இப்போது நல்ல சூடான வேர்கடலை பக்கோடா ரெடி

குறிப்புகள்: