வெண்டைக்காய் சிப்ஸ்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 10
கடலைமாவு - 2 தேக்கரண்டி
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயை (4)நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசிமாவு,கார்ன்ஃப்ளார் மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,பெருங்காயத்தூள்,உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வெண்டைக்காய் போட்டு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.