வெஜிடபிள்ஸ் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

அரிசி மாவு - 100 கிராம்

மைதா - 100 கிராம்

தனியா - 50 கிராம்

வெங்காயம் - 1/4 கிலோ

முட்டைக்கோஸ் - 1/4 கிலோ

காரட் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - சிறிய துண்டு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, மிளகாய், வெங்காயம், முட்டைகோஸ், காரட், ஆகியவற்றை துருவிக் கொள்ளவும்.

பின்பு கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தேவையான நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: