வாழைப்பூ தனி பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 35 என்னம்
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 கப்
பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப
சோடா மாவு - 2 சிட்டிகை
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் (நரம்பு, கண்ணாடி இழையை எடுத்து வைக்கவும்) செய்து நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு 3 நிமிடம் வேகவைக்கவும்.
சோம்பு, பொட்டுக்கடலையை நைசாக அரைக்கவும்.
கடலைமாவு, பச்சரிசிமாவு, சோடாமாவை சலித்து அதில் அரைத்த கலவையை கொட்டி, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.
அதில் வேகவைத்த வாழைப்பூவை போட்டு பஜ்ஜி போல பிரட்டி காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.