வாழைப்பழ போண்டா (1)
0
தேவையான பொருட்கள்:
பூவன் வாழைப்பழம் - 5
மைதா - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 2
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஏலக்காயை பொடி செய்யவும். மைதா மாவுடன் ஏலக்காய், சர்க்கரை, உப்பு, வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.