வாழைக்காய் வடை

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1

சின்ன வெங்காயம் - 20 எண்ணிக்கை

பச்சைமிளகாய் - 2

மல்லி இலை கறிவேப்பிலை - சிறிது

பூண்டு - 3பல் தட்டியது

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை வேகவைத்து தோல் எடுத்து துருவிக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்

(எண்ணெய் தவிர்த்து) துருவிய வாழைக்காயில் அனைத்தயும் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும் (தண்ணீர் சேர்க்க கூடாது)

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வடையாக தட்டிபோட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: