வாழைக்காய் பஜ்ஜி (2)
0
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
கடலை மாவு - கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - 1/4 தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, கலர் பவுடர், சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
வாழைக்காய் சீவி கொள்ளவும்.
சீவிய வாழைக்காய் ஒவ்வொன்றாக மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.