வாழைக்காய் பஜ்ஜி
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
கடலை மாவு - 1 கப்
மைதா மாவு - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காயை தோலினை சீவிய பிறகு மிகவும் மெலியதாக நீட்டாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர் , ரெட் கலர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும்.
பின் இத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள வாழைக்காயை ஒவ்வொன்றாக கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் போட்டு நன்றாக வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.