வாழைக்காய் சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 1/2 மேசைக்கரண்டி

மல்லித்தூள் - 1/2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். வாழைக்காயின் தோலை சீவி வைக்கவும்.

இரண்டாக நறுக்கி 5 நிமிடம் வேக வைக்கவும்.

மெல்லியதாக, வட்ட வட்டமாக நறுக்கி தூள் வகைகளை சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

சாம்பார் சாதத்திற்கு பொருத்தமான டிஷ்.