வாழைக்காய் கோலா
0
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
இஞ்சி - 1/2 அங்குலம்
பச்சைமிளகாய் - 6
பூண்டு - 3 பல்
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 இனுக்கு
எண்ணைய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
வாழைக்காயை தோலுடன் வேகவைக்கவும்.வெந்தபின் தோலை உரித்து கையால் /கத்தியால் துண்டாக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, பச்சை மிளகாய், பூண்டு, பட்டை, வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் வாழைக்காயையும் நைசாக அரைக்கவும்.
அரைத்ததை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.