ரைஸ் பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
கடலை மாவு - 1/4 கப்
ரவா - 1/2 கப்
தயிர் 1/2 கப்
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 3
மல்லி இலை (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) -2 கொத்து
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
எண்ணை சூடானதும் சின்ன சின்ன பக்கோடாக்களாக (பொன்னிறமாக) பொறித்தெடுக்கவும்.