ரைஸ் க்ரிஸ்பி கட்லெட்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
வேர்க்கடலை (வறுத்துப் பொடித்தது) - 1/2 கப்
நடுத்தர உருளைக் கிழங்கு (வேக வைத்தது) - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலைப் பொடி, உருளைக் கிழங்கு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை தனியாக நன்றாக மசித்துக் கொள்ளவும். இதையும் அந்த கலவையுடன் நன்றாகக் கலக்கவும்.
அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்தவுடன் சின்ன சின்ன சதுரங்களாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
தட்டியதை வேர்கடலைப் பொடியில் புரட்டி எடுக்கவும்.
எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில், புரட்டி எடுத்ததைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.