ராகி பக்கோடா
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 250 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 4
கறிவேப்பிலை - 5 இனுக்கு
மல்லித் தழை - 1/4 கட்டு
வரமிளகாய் - 5
சீரகம் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், மல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வரமிளகாய், பாதி அளவு பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ராகி மாவில் கலந்து கொள்ளவும்.
வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ராகி கலவையோடு வேர்க்கடலை கலந்து கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் உதிரி உதிரியாகப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.