முறுக்கு (5)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு டம்ளர்

பாசி பருப்பு - 1/4 டம்ளர்

எள் - 1 தேக்கரண்டி

பெருங்காய பொடி - ஒரு பின்ச்

பட்டர் - 2 மேசைக்கரன்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசி பருப்பை வறுத்து திரிக்கவும்.

அரிசி மாவில் பாசி பருப்பு, எள், உப்பு பெருங்காய பொடி, பட்டர் எல்லாம் சேர்த்து பிசைந்து கொஞ்சமாக வெந்நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து 5 நிமிடம் ஊறியதும் .

முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயை சூடாக்கி கண் கரண்டியை சூடான எண்ணெயில்முக்கி கொண்டு கண்கரண்டி அளவு முறுக்கு ஷேப்பில் பிழிந்து எண்ணெயில் போட்டு கருகாமல் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: