முறுக்கு (4)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முறுக்கு மாவு - 2 கப்

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

டால்டா - 1/4 கப்

எள்ளு - 3/4 தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முறுக்கு மாவு தயாரிக்க: ஒரு கிலோ பச்சரிசிக்கு கால் கிலோ வெள்ளை உளுத்தம்பருப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி காயவைத்துக் கொள்ளவும். பச்சரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

முறுக்கு மாவுடன் பெருங்காயத் தூள், உப்பு, எள்ளு சேர்த்து கலந்து கொண்டு, பின்னர் உருக்கிய டால்டாவை ஊற்றி கட்டியில்லாமல் பிசையவும்.

பிறகு ஒரு கப் தண்ணீரை சிறிது சிறிதாக கையில் ஊற்றி, மாவில் தெளித்து பிசையவும். வெறும் தண்ணீரைவிட இளஞ்சூடான வெந்நீர் ஊற்றி பிசையவும்.

மாவின் பதம் மிகவும் தளர்வாக இல்லாமலும், கெட்டியாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும். மிருதுவாக பிசையவும். மாவு பதமாக இருந்தால்தான் பிழிவதற்கு எளிதாக இருக்கும். முறுக்கின் சுவையும் நன்றாக இருக்கும்.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் கொள்ளும் அளவுக்கு வைத்து தட்டில் அல்லது பேப்பரில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து வைத்த முறுக்கை 4 அல்லது 5 போட்டு வேகவிடவும். முறுக்கினைப் போட்டவுடன் எண்ணெய் பொங்கினாற்போல் வரும்.

முறுக்கு பொன்னிறமாக சிவந்து, எண்ணெய் பொங்குவதும் அடங்கியவுடன் முறுக்கை ஒரு கம்பி அல்லது சாரணி கொண்டு எடுத்து விடவும். ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் வடியவிட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: