முறுக்கு
4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கிலோ
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பயத்தம்பருப்பு - 100 கிராம்
எள் - 50 கிராம்
உப்பு - தேவைக்கு
பெருங்காயதூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையானது
செய்முறை:
வாணலியில் உளுத்தம்பருப்பை லேசாக வாட்டி, பயத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து அரிசியுடன் சேர்த்து மெஷினில் அரைக்கவும். அரைத்த மாவில் எள், உப்பு, பெருங்காய்தூள் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவை வைத்து சாரணியில் பிழியவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான முறுக்கு தயார். இந்த முறையில் முறுக்கு மாவை அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்து மாதத்துக்கு கெட்டு போகாது எப்பொழுது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.