மிளகாய் பஜ்ஜி (2)
0
தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மிளகாய் - 5
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 3 பல்
சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 3
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாயை காம்பிலிருந்து இரண்டாக நீளவாக்கில் நறுக்கி இரண்டு துண்டுகளாக்கவும். அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். அதிக நீள மிளகாய் என்றால் திரும்ப இரண்டு துண்டுகளாக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, பூண்டு, வெங்காயம், உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து 20 நிமிடம் வைக்கவும்.
பிறகு எண்ணெயை காயவைத்து மிளகாயை கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் முக்கி பொரித்து எடுத்து பரிமாறவும்.